நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் சதம் மற்றும் 2-வது இன்னிங்சில் அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் பெருமையை ஸ்ரேயாஸ் அய்யர் பெற்றுள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்கள் குவித்தது .இதில் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து அசத்தினார்.அதன் பிறகு இரண்டாவது இன்னிங்சில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 பவுண்டரி ஒரு சிக்சர் என 65 ரன்கள் குவித்தார் இதன் மூலம் அறிமுகமான டெஸ்ட் போட்டியிலேயே முதல் இன்னிங்சில் சதம் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் .
அதோடு அறிமுக போட்டியில் 2 இன்னிங்சிலும் 50-க்கு மேல் ரன் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் 65 மற்றும் 67 ரன்னும் , 1933-ம் ஆண்டு திலாவர் உசேன் இங்கிலாந்து அணிக்கு எதிரான 59 மற்றும் 57 ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.