மீனம் ராசி அன்பர்களே..!! இன்று பிரச்சனைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். அதுமட்டுமில்லாமல் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். புதிய பணிகளை பின்னொரு அனுகூல நாளில் துவங்கலாம். இன்று கொஞ்சம் பொறுமையை மட்டும் கையாளுங்கள். தொழில் வியாபாரத்தை பொருத்தவரை ஓரளவு சிறப்பாக இருக்கும். சேமிப்பு பணம் இன்றைக்கு செலவுக்கு பயன்படும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை கொஞ்சம் உதவும். இன்று குடும்பத்தில் இருப்பவருடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.
கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் இருக்கட்டும். அக்கம்பக்கத்தினருடன் சில்லரை சண்டைகள் கொஞ்சம் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். பஞ்சாயத்துக்கள் ஏதும் பண்ணாதீர்கள். தெய்வீக பக்தி இன்று கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மேலதிகாரியுடன் இன்று நீங்கள் இணக்கமாகப் பழகுவீர்கள்.
இன்று மாணவக் கண்மணிகள் நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை அனுபவிக்க கூடும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் அதிகரிக்கும். சக மாணவரிடம் ஒத்துழைப்புடன் நடந்துக் கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்