தாய்லாந்தில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த குரங்கு திருவிழா நடைபெற்றுள்ளது.
தாய்லாந்து நாட்டின் லோப்புரி நகருக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வர முக்கிய காரணம் குரங்குகள். எனவே, குரங்குகளுக்கு நன்றி செலுத்த இந்த விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலால் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த குரங்கு திருவிழாவானது, தற்போது கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
லோப்புரி நகரில் இரண்டு டன் வாழைப் பழங்களையும், காய்கறிகளையும் வைத்து இத்திருவிழாவை நடத்தினர். இதனை, ஆயிரக்கணக்கான குரங்குகள் உண்டு மகிழ்ந்தது. குரங்குகள், உற்சாகமாக பழக் குவியல்கள் மீது ஏறி உண்ணத் தொடங்கியது. சுற்றுலா பயணிகள் ஆர்வமாக அதனை கண்டு களித்ததோடு புகைப்படம் எடுத்தனர்.