‘ஒமிக்ரான்’என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மகளிர் உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் தற்போது பரவி வரும் ‘ஒமிக்ரான்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஜிம்பாப்வேயில் நடைபெற இருந்த மகளிர் உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டி ரத்து செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
அதோடு பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் தரவரிசை அடிப்படையில் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளது .இதையடுத்து ஆஸ்திரேலியா, இந்தியா ,இங்கிலாந்து ,தென் ஆப்பிரிக்கா ,நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது .மேலும் உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 4-ஆம் நாள் முதல் நியூசிலாந்தில் நடைபெற உள்ளது.