பெண்ணிடம் செல்போன் பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அன்புநகர் பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் பெருமாள்புரம் ரயில்வே பீடர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென விஜயலட்சுமி கையில் வைத்திருந்த கைப்பையை பறித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி கத்தி கூச்சல் போட்டார்.
அந்த அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர். அந்த பையில் செல்போன் மற்றும் ரூ.1200 ரூபாய் இருந்தது. இதுகுறித்து விஜயலட்சுமி பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் பெண்ணிடம் செல்போன் பறித்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.