Categories
உலக செய்திகள்

“இந்திய மக்கள் உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறார்கள்!”… -பிரதமர் நரேந்திர மோடி..!!

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

இந்திய பிரதமர், இன்றைக்கு, “மனதின் குரல்” நிகழ்ச்சி மூலம் நரேந்திர மோடி பேசினார். அதில், ஜலானில் நூன் என்ற நதி இருந்தது. அந்த நதி அழியும் நிலைக்கு வந்தது. எனவே, அப்பகுதி விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஜலான் மக்கள், இந்த வருடத்தில் ஒரு குழுவை உருவாக்கி அந்த நதியை மீட்டனர். “அனைத்து மக்களின் ஒத்துழைப்பும் இருந்தால், அனைவருக்கும் வளர்ச்சி கிடைக்கும்” என்பதற்கு இது உதாரணம்.

இன்று நாட்டில், ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புடைய 70-க்கும் அதிகமான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருக்கின்றன. பல்வேறு இந்திய மக்கள் அவர்களின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களினால் உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வை அளித்து வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |