Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கீழப்பாவூரில் கூலி தொழிலாளியான மாரியப்பன் என்பவர் வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருகின்றது. இந்நிலையில் தம்பதியினருக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாரியப்பன்-செல்வி தம்பதியினருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளேயான நிலையில் தென்காசி உதவி கலெக்டர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Categories

Tech |