மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் காசி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மாரி கிருஷ்ணன் என்ற மகனும், 4 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் மாரி கிருஷ்ணன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மின்விசிறிக்காக வீட்டின் தரையில் வைக்கப்பட்டிருந்த சுவிட்ச் பெட்டியை தூக்கினான்.
இதில் மாரி கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தான். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மாரி கிருஷ்ணனை உடனடியாக மீட்டு ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மாரி கிருஷ்ணனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ராதாபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.