Categories
உலக செய்திகள்

சீனாவிடம் மண்டியிடுகிராதா உலக சுகாதார அமைப்பு….?? புதிய வகை கொரோனாவுக்கு பெயர் வைக்கும் விவகாரத்தில் தொடரும் சர்ச்சை….

புதிய வகை கொரோனா வைரஸ்க்கு பெயர் வைத்த விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சையை சந்தித்து வருகிறது உலக சுகாதார அமைப்பு.

உலக சுகாதார அமைப்பானது புதிய கொரோனா வைரஸ்க்கு கிரேக்க எழுத்துகளைத் தவிர்த்து omicron என பெயர் சூட்டியுள்ளது. ஆனால் புதிய கொரோனா மாறுபாட்டுக்கு xi என்றே பெயர் வைத்து இருக்க வேண்டும். ஆனால் xi என்பது சீன ஜனாதிபதியின் பெயர் என்பதால் அந்த பெயரை புதிய கொரோனா வைரஸ்க்கு வைக்கவில்லை. இதனால் உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் மண்டியிடுவதாக பல சர்ச்சையான கருத்துகள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பிடம் கேள்வி எழுப்பியபோது xi என்பது பொதுவான பெயர் என்பதால் அதனை வைக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு புதிய வகை கொரோனா தொற்று விவகாரத்தில் மென்மையான போக்கை கையாண்டு வருவதாக பலர் சர்ச்சையான கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் உலக சுகாதார அமைப்பு சீனாவின் ஜனநாயக கட்சி மத்தியில் மண்டியிடுவதாகவும் சீனாவுக்கு அஞ்சுவதாகவும் பலர் விமர்சனங்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே இந்தியாவில் காணப்பட்ட மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மாறுபட்ட கொரோனா வைரசுக்கு டெல்டா என பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் அடுத்த நிலையான கொரோனா வைரசுக்கு Nu என பெயர் வைத்திருக்க வேண்டும் ஆனால் உலக சுகாதார அமைப்பு omicron என பெயர் சூட்டி உள்ளது.

Categories

Tech |