வீடு இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் இரவு படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பெய்த கனமழையால் திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் ரங்கசாமியின் மனைவியான காளியம்மாள், அவரது உறவினரான சசிகுமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி காளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உடுமலை அரசு மருத்துவமனையில் காளியம்மாளின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.