Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 29…!!

நவம்பர் 29  கிரிகோரியன் ஆண்டின் 333 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 334 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 32 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1394 – கொரிய மன்னர் யி சொங்-கை தலைநகரை கேசாங்கில் இருந்து அன்யாங்கிற்கு (இன்றைய சியோல்) மாற்றினார்.

1549 – திருத்தந்தைத் தேர்தல் (1549–50) ஆரம்பமானது.

1612 – சுவாலி என்ற இடத்தில் (இன்றைய குசராத்து மாநிலத்தில்) போர்த்துக்கீசருக்கும் கிழக்கிந்திய நிறுவன படைகளுக்குமிடையே இடம்பெற்ற போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.

1729 – நாட்செசு பழங்குடியினர் மிசிசிப்பியில் பிரெஞ்சுக் குடியேறிகளான 138 ஆண்கள், 35 பெண்கள், 56 குழந்தைகளைப் படுகொலை செய்தனர்.

1732 – தெற்கு இத்தாலி, நாபொலியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,940 பேர் உயிரிழந்தனர்.

1781 – அடிமைகளை ஏற்றிச்சென்ற சொங் என்ற பிரித்தானியக் கப்பல் மாலுமிகள் காப்பீடு பெறுவதற்காக 133 ஆப்பிரிக்கர்களைக் கொன்று கடலுக்குள் எறிந்தனர்.

1783 – அமெரிக்காவின் நியூ செர்சி மாநிலத்தில் 5.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

1807 – நெப்போலியப் படைகள் போர்த்துகலுக்கு முன்னேறியதை அடுத்து ஆறாம் யோவான் மன்னர் லிஸ்பனில் இருந்து அரச குடும்பத்தினருடன் வெளியேறி பிரேசிலுக்கு சென்றார்.

1830 – போலந்தில் உருசியாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.

1847 – வாசிங்டனில் மதப்பரப்புனர் மார்க்கசு விட்மன், அவரது மனைவி மற்றும் 15 பேர் அமெரிக்கப் பழங்குடிகளினால் கொல்லப்பட்டனர்.

1850 – புருசியா ஆத்திரியாவின் தலைமையில் செருமன் கூட்டமைப்பில் சேர சம்மதித்தது.

1855 – துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.

1877 – தாமசு ஆல்வா எடிசன் போனோகிராப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.

1890 – சப்பானில் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.

1899 – பார்சிலோனா கால்பந்துக் கழகம் அமைக்கப்பட்டது.

1915 – கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய கட்டடங்கள் தீப்பற்றி எரிந்தன.

1922 – ஹவார்ட் கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விட்டார்.

1929 – அமெரிக்கர் ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை மேல் பறந்த முதல் மனிதரானார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா விடுவிக்கப்பட்டது.

1945 – யுகோசுலாவிய கூட்டு மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.

1947 – முதலாம் இந்தோ-சீனப் போர்: வியட்நாமில் மீ டிராக் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகளடங்கிய 300 பேரைப் படுகொலை செய்தன.

1947 – பாலத்தீனத்தைப் பிரிப்பதென ஐக்கிய நாடுகள் பொதுச் சபை முடிவெடுத்தது.

1950 – வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.

1961 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது.

1963 – கனடிய விமானம் மொன்ட்ரியாலில் விபத்துக்குள்ளாகியதில் 118 பேர் உயிரிழந்தனர்.

1982 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சோவியத் படைகளை ஆப்கானித்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.

1986 – சுரிநாம் இராணுவம் மொய்வானா கிராமத்தைத் தாக்கி 39 பொதுமக்களைக் கொன்றது.

1987 – தென் கொரிய விமானம் தாய்-பர்மிய எல்லைக்கருகில் வெடித்துச் சிதறியதில் 115 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாக்கித்தான் வெற்றிகரமாக நடத்தியது.

இன்றைய தின பிறப்புகள்

1803 – கிறிஸ்டியன் டாப்ளர், ஆத்திரியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1853)

1835 – டோவாகர் சிக்சி, சீனப் பேரரசி (இ. 1908)

1901 – சோபா சிங், இந்திய ஓவியர் (இ. 1986)

1908 – என். எஸ். கிருஷ்ணன், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 1957)

1913 – எஸ். வி. சகஸ்ரநாமம், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 1988)

1913 – பெஞ்சமின் மர்க்கரியான், ஆர்மேனிய-சோவியத் வானியற்பியலாளர் (இ. 1985)

1924 – பாறசாலை பி. பொன்னம்மாள், கேரளக் கர்நாடக இசைக்கலைஞர் (இ. 2021)

1932 – ஜாக் சிராக், பிரான்சின் 22வது அரசுத்தலைவர் (இ. 2019)

1936 – ஆ. வேலுப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2015)

1963 – திலீபன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (இ. 1987)

1963 – லலித் மோடி, இந்தியத் தொழிலதிபர்

1977 – யூனுஸ் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர்

1982 – ரம்யா, இந்திய நடிகை, அரசியல்வாதி

இன்றைய தின இறப்புகள்

1530 – தாமஸ் வோல்சி, இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் (பி. 1470)

1694 – மார்செல்லோ மால்பிகி, இத்தாலிய உயிரியலாளர், மருத்துவர் (பி. 1628)

1872 – மேரி சோமர்வில்லி, இசுக்காட்டிய-இத்தாலிய வானியலாளர், கணிதவியலாளர்.

1924 – ஜாக்கோமோ புச்சீனி, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1858)

1989 – அ. மருதகாசி, திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1920)

1993 – ஜெ. ஆர். டி. டாட்டா, பிரான்சிய-இந்தியத் தொழிலதிபர் (பி. 1904)

2008 – ஜோர்ன் உட்சன், தென்மார்க்கு கட்டிடக்கலைஞர் (பி. 1918)

2010 – எஸ். சிவநாயகம், இலங்கை ஊடகவியலாளர் (பி. 1930)

2011 – இந்திரா கோஸ்வாமி, அசாமிய எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (பி. 1942)

2011 – எம். ஏ. அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (பி. 1926)

2013 – பாலகுமாரன் மகாதேவா, இலங்கைத் தமிழ்க் கல்வியாளர் (பி. 1921)

இன்றைய தின சிறப்பு நாள்

பலத்தீன மக்களுடனான ஒற்றுமைக்கான பன்னாட்டு நாள்

விடுதலை நாள் (அல்பேனியா)

குடியரசு நாள் (யுகோசுலாவியா)

ஒற்றுமை நாள் (வனுவாட்டு)

Categories

Tech |