ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸ் சென்ற ஆண்டு பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவை திருமணம் செய்துகொண்டார். ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இதையடுத்து தனது அழகு மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் நிக் ஜோனஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் ‘ஓராண்டுக்கு முன்னர் இதே நாளில் நாம் சொன்னோம், என்றென்றும் என்றும் தூரமில்லை, என் இதயம் நிறைந்து உன்னை காதலிக்கிறேன்.. மணநாள் வாழ்த்துகள்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கணவனின் வாழ்த்துக்கு பதிலளிக்கும் வண்ணம், பிரியங்கா சோப்ராவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘என் சத்தியம். அன்றும்.. இன்றும்.. என்றும். நீங்கள் எனக்கு மகிழ்ச்சி, நிறைவு, சமநிலை, உற்சாகம் என அனைத்தையும் ஒரே நேரத்தில் கொண்டுவந்துள்ளீர்கள்..என்னை கண்டுபிடித்ததற்கு நன்றி.. முதலாமாண்டு திருமண நாள் வாழ்த்துகள் கணவரே..’ என்று பதிவிட்டிருந்தார். இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதியில் கிறிஸ்தவ முறைப்படியும், 2ஆம் தேதியன்று இந்து முறைப்படியும் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
One year ago today we said forever… well forever isn’t nearly long enough. I love you with all of my heart @priyankachopra happy anniversary. pic.twitter.com/7UpmLmPTu8
— Nick Jonas (@nickjonas) December 1, 2019
https://twitter.com/priyankachopra/status/1201261543717064706