Categories
பல்சுவை வைரல்

கழட்டி விட்ட காதலி…. டிரஸ், மேக்கப், ரீசார்ஜ்-னு 7 லட்சம் செலவு….பட்டியல் போட்ட காதலன்….!!!!

காதலில் தோல்வியடைந்த இளைஞர் ஒருவர் எழுதிய கடிதம்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காதலிக்கும் இளைஞர்கள் காதலில் தோல்வியடைந்த கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டு மதுவுக்கு அடிமையாக இருப்பதை பார்த்திருப்போம். சில நபர்கள் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொள்வார்கள். இன்னும் சிலர் நீண்ட காலம் திருமணம் செய்து கொள்ளாமல் வருத்தத்துடன் இளமைக்காலத்தை சிங்கிளாகவே கழித்து விடுவார்கள். காதலில் தோற்கும் இளைஞர்களின் இத்தகைய பழக்க வழக்கங்கள் தற்போது மலையேறி விட்டது.

காதலில் தோல்வி அடைந்த அடுத்த நாளே புதிய காதலுக்கான முயற்சியைத் தொடங்கி விடுகிறார்கள். சில நபர்கள் தற்காப்புக்காக ஒரே நேரத்தில் பலரையும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில் காதலில் தோல்வி அடைந்த இளைஞர் ஒருவர் தான் இழப்பீடு கேட்டு காதலியின் பெற்றோருக்கு கடிதம் எழுதி உள்ளார். காதலியினால் பாதிக்கப்பட்டவர் என தொடங்கும் அந்த கடிதத்தில் தங்கள் மகளை 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், அவர் காதலை ஏற்காததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும், குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் காதலித்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட செலவுகளை அந்த இளைஞர் பட்டியலிட்டு காட்டியுள்ளார். அந்த பட்டியலில் உடைகள், சிகை அலங்காரம், ரீசார்ஜ் கட்டணம், எரிபொருள் செலவு மதுவுக்கு அடிமையானதால் ஏற்பட்ட செலவுகள் உள்ளிட்டவை இடம்பெற்றது. காதலித்ததால் கடந்த 5 ஆண்டுகளில் 7,21,000 ரூபாய் தனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்த இளைஞர், அதை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கி, தன்னுடைய மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பெற்றோருக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

காதல் பிரிவு ஏற்பட்டால் அன்பளிப்பாகப் பெற்ற பொருட்களை திரும்ப தரும்படி கேட்கும் காதலர்கள் எண்ணில் அடங்காதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் காதலிக்கும் போது ஏற்பட்ட செலவை பட்டியல் போட்டு அதை வழங்கும்படி காதலியின் பெற்றோருக்கு கடிதம் எழுதப்பட்ட சம்பவம் வினோதமாக இருக்கு. காதலில் தோல்வி அடைந்த அந்த இளைஞர் யார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. அவர் எழுதிய வினோதமான கடிதம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |