சென்னையில் இந்த மாதத்தில் மட்டும் 100 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் தொடக்கம் முதலே கனமழை பெய்தும் வருகிறது. நவம்பர் மாதத்தில் 27 நாட்களில் 1,003 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதாவது 100 செ. மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.
சென்னையில் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மாதத்தில் 100 செ.மீட்டர்க்கு மழை பதிவாகி இருப்பது இது 4-ஆவது முறையாகும். நவம்பர் மாதத்தில் மழைப்பொழிவு சதம் அடித்து இருப்பது 3-ஆவது முறையாகும்.
இதற்கு முன் கடந்த 2005-ஆம் ஆண்டு அக்டோபரில் 1078 மில்லி மீட்டரும், 2015-ஆம் ஆண்டு நவம்பரில் 1,049 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் 1,000 மில்லி மீட்டரை கடந்து மழை பதிவாகி சென்னை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.