மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய முயற்சிகள் யாவும் வெற்றியை கொடுக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்திகளை கேட்க கூடும். இன்று வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாளாகவே இன்று இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களை மட்டும் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும்.
இன்று கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி குறைய மனம்விட்டுப் பேசுவது நல்லது பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். உங்களது செயல்களில் மற்றவர்கள் குறை காண நேரலாம். தெய்வ பக்தி இன்று அதிகரிக்கும். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பயணம் மூலம் ஓரளவு நன்மை கிடைக்கும். இன்று மாணவ கண்மணிகள் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். கல்வியில் இருந்த தடை விலகி செல்லும்.
சக மாணவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை இன்று நாடக் கூடும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். மாறுபட்ட அணுகு முறையால் சாதிக்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இழுபறியான நிலை கொஞ்சம் காணப்படும்.
சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறைகாண கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று வாகனத்தில் செல்லும்போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கவனமாக இருங்கள். பெண்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களும் ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும்.
சக மாணவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமையும் இன்று நீங்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்டவை தாமதமாகத்தான் நடந்தேறும். மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேசிக் கொண்டு செல்ல வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் நீங்களே முடிவெடுக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாளாக இன்று இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும்.
புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். இன்று ஓரளவு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மாணவக் கண்மணிகள் மட்டும் கொஞ்சம் முயற்சியின் பேரில் பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள்.
அப்போது தான் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகள் கிட்டும். பெற்றோரின் ஆதரவும் பெருகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை பாராட்டக் கூடும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று பிள்ளைகள் அறிவுத் திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும். எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும்.
காரிய தாமதம் ஏற்படும். வீண் கவலை இருக்கும். பண வரவு அதிகப்படும், அதே நேரத்தில் வீண் செலவு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இன்று வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்யும் பொழுது கொஞ்சம் பொறுமையாக பேசி வசூல் செய்யுங்கள். அதுமட்டுமில்லாமல் இன்று யாருக்கும் நீங்கள் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். வாக்குறுதிகளும் ஏதும் கொடுக்காதீர்கள்.
இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் முயற்சியின் பேரில் கல்வியில் வெற்றி அடைய முடியும். கொஞ்சம் கடினமாக பாடங்களைப் படியுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே..!! கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகி செல்லும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாளாக இருக்கும். இன்று எந்த ஒரு காரியமும் மந்தமாகத்தான் நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் சுமாராகவே இருக்கும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவுகள் கூடும். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பயணங்கள் ஓரளவு அலைச்சலை கொடுப்பதாக தான் இருக்கும். இன்று காரியங்களை செய்யும் பொழுது கொஞ்சம் பொறுமையாக செய்யுங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவரின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மகளுக்கு நல்ல வரண் அமையும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள் ஆக இன்றைய நாள் இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் இடைவெளி ஏற்படலாம். கூடுமானவரை எந்த ஒரு விஷயத்தையும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. இன்று முக்கியமான முடிவுகளை எடுக்கும்பொழுது பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு எடுங்கள். இன்று செலவு கொஞ்சம் இருக்கும். வரவும் இருக்கும். உழைப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல சிறப்பான முன்னேற்றத்தை அடையமுடியும்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு முக்கியப் பணியையும் செய்வீர்கள். அதுமட்டுமில்லாமல் சக மாணவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டுகள் கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுக்க கூடும்.
எனவே கவனமாக இருப்பது மட்டும் நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். இன்று பிரச்சினைகள் வலுக்கட்டாயமாக வரக்கூடும். ஆகையால் நீங்கள் வாக்குவாதங்கள் நடக்கக் கூடிய இடங்களில் நிற்கவேண்டாம். கூடுமானவரை பஞ்சாயத்துக்கள் ஏதும் பண்ண வேண்டாம். இன்று பொறுமையை மட்டும் கடைபிடியுங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் ஓரளவு முன்னேற்றத்தை பெறக்கூடும்.
கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப்பெருமான் வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்பாடுகளில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள். அடுத்தவர்களை குறை கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். சிலரின் நயவஞ்சக பேச்சு உங்களை மன வருத்தத்திற்கு ஆளாக்க கூடும். பொறுமை தேவைப்படும் நாளாக இன்று இருக்கும். இன்று குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை மட்டும் காணப்படும்.
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை கொடுப்பதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். பணவரவு ஓரளவு திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் ஓரளவு சாதகமாக முடியும். பழைய பிரச்சினைகள் கொஞ்சம் தலை தூக்கும். கடன் விவகாரங்கள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும். இன்று உங்களுடைய நிதி மேலாண்மை ஓரளவு சுமாராக தான் இருக்கும்.
இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பாடத்தில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டாகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும் உங்களை மதிக்க கூடும். திறமைகள் வெளிப்படும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும். இன்று எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கல்களும் கொஞ்சம் இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் தீர கடுமையாக பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர்கள் பிடிப்பதற்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமான உழைப்பு இருக்கும். இன்று உங்களுடைய செயல் திறன் ஓரளவு அதிகரிக்கும். இன்று கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்யும் பொழுது கொஞ்சம் நிதானமாக இருங்கள். வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்து விடுங்கள்.
இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப்பெருமான் வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகளை கொடுப்பார்கள். சாதித்துக் காட்டும் நாளாக தான் இன்று இருக்கும். இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத திருப்பம் ஏற்படும்.
சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு வழிவகுக்கும். பயணங்களின் போதும் வாகனத்தை ஓட்டிச் செல்லும்போதும் எப்பொழுதுமே எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தில் செல்லும் போது அலைப்பேசியில் பேசுவதை தவிர்த்து விடுங்கள். இன்று மாணவக் கண்மணிகள் நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை அடையக்கூடும். சக மாணவரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
இருந்தாலும் பாடத்தை கொஞ்சம் கண்ணும் கருத்துமாக படியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்
கும்பம் ராசி அன்பர்களே..!! கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் அனைத்துமே நீங்கும். நிலுவையாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைகள் உடைபடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலனைக் கொடுக்கும்.
உறவினருடன் அனுசரித்துச் செல்வதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் மிகவும் நல்லது. இன்று கூடுமானவரை செய்யும் காரியங்களை நிதானமாகவும் பொறுமையாகவும் செய்யுங்கள். மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் எதுவும் கொடுக்காதீர்கள். அதுமட்டுமில்லாமல் பஞ்சாயத்துகள் ஏதும் செய்யாதீர்கள். இதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று மாணவக் கண்மணிகள் கல்வியில் நல்ல சிறப்பை அடையக்கூடும்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவரின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். யாருக்கும் பஞ்சாயத்துக்கள் ஏதும் செய்யாதீர்கள். அதுமட்டுமில்லாமல் யாருக்குமே நகை பணம் வாங்கித் தருவதில் ஈடுபடாதீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி இருக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாளாகவும் இன்று இருக்கும். இன்று புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அவர்களிடம் கவனமாக பழகுவது மட்டும் நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளரிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும். இன்று ஓரளவு மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இருந்தாலும் படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எப்பொழுதும் போலவே எழுதிப் பாருங்கள். அப்போதுதான் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப்பெருமான் வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்