மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய முயற்சிகள் யாவும் வெற்றியை கொடுக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்திகளை கேட்க கூடும். இன்று வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாளாகவே இன்று இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களை மட்டும் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும்.
இன்று கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி குறைய மனம்விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். உங்களது செயல்களில் மற்றவர்கள் குறை காண நேரலாம். தெய்வ பக்தி இன்று அதிகரிக்கும். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பயணம் மூலம் ஓரளவு நன்மை கிடைக்கும். இன்று மாணவ கண்மணிகள் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். கல்வியில் இருந்த தடை விலகி செல்லும்.
சக மாணவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்