Categories
கடலூர் சற்றுமுன் மாவட்ட செய்திகள்

BREAKING: கடலூரில் பள்ளிகளுக்கு மட்டுமல்ல…. கல்லூரிகளுக்கும் விடுமுறை தான்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்கனவே மக்கள் பல்வேறு சேதங்களை சேதங்களை அனுபவித்தனர். வீடுகளும் இடிந்து சேதம் அடைந்துள்ள நிலையில் குமாரி கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் 1ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நீர் நிலைகள் நிரம்பி குடியிருப்புகள் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பல இடங்களிலும் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |