கடகம் ராசி அன்பர்களே..!! இன்று ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகள் கிட்டும். பெற்றோரின் ஆதரவும் பெருகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை பாராட்டக் கூடும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று பிள்ளைகள் அறிவுத்திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும். எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும்.
காரிய தாமதம் ஏற்படும். வீண் கவலை இருக்கும். பண வரவு அதிகப்படும், அதே நேரத்தில் வீண் செலவு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இன்று வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்யும் பொழுது கொஞ்சம் பொறுமையாக பேசி வசூல் செய்யுங்கள். அதுமட்டுமில்லாமல் இன்று யாருக்கும் நீங்கள் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். வாக்குறுதிகளும் ஏதும் கொடுக்காதீர்கள். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் முயற்சியின் பேரில் கல்வியில் வெற்றி அடைய முடியும்.
கொஞ்சம் கடினமாக பாடங்களைப் படியுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்