தென்னப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொடிய ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவிவரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைகளை அதிகப்படுத்துவது உட்பட சில அறிவுரைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓமிக்ரான் வைரஸ் அபாய நாடுகளாக ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா, உள்ளிட்ட நாடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா, செக்குடியரசு, இத்தாலி, ஜெர்மனி, இஸ்ரேல் மற்றும் நெதர்லாந்தும், அந்த பட்டியலில் இணைந்துள்ளது. ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு பாதிப்பு அபாயம் அதிகம் இருக்கும் நாடுகளில் இருந்து வந்த பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.
மேலும் தீவிர கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கவும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாறுபாட்ட வைரஸ் கண்டறியப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளை கடுமையாக கண்காணிக்குமாறு மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.