துலாம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டுகள் கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுக்க கூடும்.
எனவே கவனமாக இருப்பது மட்டும் நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். இன்று பிரச்சினைகள் வலுக்கட்டாயமாக வரக்கூடும். ஆகையால் நீங்கள் வாக்குவாதங்கள் நடக்கக் கூடிய இடங்களில் நிற்கவேண்டாம். கூடுமானவரை பஞ்சாயத்துக்கள் ஏதும் பண்ண வேண்டாம். இன்று பொறுமையை மட்டும் கடைபிடியுங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் ஓரளவு முன்னேற்றத்தை பெறக்கூடும்.
கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப்பெருமான் வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்