தமிழகத்தில் மழைக்கு பலியான 59 பேர் குடும்பத்திற்கு ரூ.2¼ கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கடந்த மாதம் 25 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 28ஆம் தேதி வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர் கனமழை காரணமாக உயிரிழந்த 59 பேர் குடும்பத்திற்கு 2 கோடியே 36 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
அதனைப் போலவே 2,943 கால்நடைகள் உயிரிழந்ததால், அதற்காக 3,43,71,000 ரூபாயும், காயமடைந்த 13 பேருக்கு நிவாரண உதவியாக 55,900 ரூபாய் மற்றும் மழை வெள்ளத்தால் 24,810 குடிசைகள் சேதமடைந்தன. அதற்கு இழப்பீடாக 10 கோடியே 17 லட்சத்து 23 ஆயிரம் என மொத்தம் 15 கோடியே 97 லட்சத்து 47 ஆயிரத்து 900 வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.