Categories
சினிமா

தனுஷ்னா சும்மா இல்ல…! வேற லெவல் கலக்கல்…. அசுரனுக்கு சூப்பர் விருது….!!

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அசுரன் திரைப்படத்திற்கு தனுசுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது, இந்த படத்தில் தனுஷ்க்கு தேசிய விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து மற்றொரு விருதும் தற்போது தனுசுக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவான IFFI இன்றுடன் முடிவடைந்தது. சுமார் ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்த திரைப்பட விழாவில் பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் படம் வெளியிடப்பட்டது. இதில் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய விருதை தொடர்ந்து மற்றொரு விருதையும் அசுரன் படம் பெற்றுள்ளது. இது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தனுஷுக்கு திரைத்துறையை சார்ந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |