தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, தடுப்பூசி அதிகப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.