Categories
மாநில செய்திகள்

கடலில் மூழ்கிய விசைப்படகுகள்….. மீனவர்கள் வைக்கும் கோரிக்கை….!!!

தொடர் கனமழை, கடல் சீற்றம் காரணமாக மூன்று நாட்களாக கடலுக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்கத் செல்லவில்லை. படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வட மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், மண்டபம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்டபம் வடக்கு கடல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று பலத்த காற்றின் காரணமாக இரண்டு படகுகள் கடலில் மூழ்கியது.

கடலில் மூழ்கிய படகுகளை நேற்று சக மீனவர்கள் போராடி மீட்டனர். இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது கடல் சீற்றம் காரணமாக படகுகள் மூழ்குவது வாடிக்கையாகி உள்ளதாகவும், இதனை தடுக்க தூண்டில் வலை தடுப்பு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் சேதமடைந்த படகுகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |