வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்தடுத்து வலுவடைய உள்ளது. அது வடக்கு ஆந்திர கடலோரம் – ஒடிசா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி அரபிக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது. மத்தியகிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. அரபிக்கடலில் குமரி அருகே நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த சுழற்சி மேற்கு நோக்கி நகர்த்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.