Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கர்ப்பத்தை தெரிவிக்க மறுப்பு” மன உளைச்சலால் தூக்கில் தொங்கிய கணவன்…….. சென்னையில் சோகம்…..!!

சென்னையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மன உளைச்சல் அடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குன்றத்தூர் பகுதியை அடுத்த விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் பவானி. இவரது மகன் உதயகுமார் அமுதா என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். உதயகுமார் கார் மெக்கானிக் ஆக பணியாற்றி தனது மனைவியுடன் சரஸ்வதி நகர் அவென்யூ பகுதியில் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவி அமுதா கர்ப்பமாக அதனை தனது தாயிடம் தெரிவிக்குமாறு உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். ஆனால் மாமியார் மருமகள் இடையேயான மனக்கசப்பு காரணமாக அதை தெரிவிக்க மறுத்து உதயகுமார் இடம் தாறுமாறாக சண்டையிட்டு உள்ளார் அமுதா. இதனால் மன உளைச்சல் அடைந்த உதயகுமார் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

தாய் வீட்டில் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேவாலயம் சென்று இருந்த தாய் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த பொழுது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அலறித் துடித்த தாய்  அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குன்றத்தூர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.

Categories

Tech |