Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்துக்கு விடியலே இல்லை…! எதுக்கு ஆட்சில இருக்கீங்க.. H ராஜா விளாசல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, 2015 தீபாவளியின் போது நான் மாயவரத்தில் இருந்தேன், மறுநாள் அங்கிருந்து சென்னைக்கு போகும் போது சாலையில் தண்ணீர் இருக்கு, வீட்டில தண்ணீர் இருக்கு, நிலத்தில் தண்ணீர் இருக்கு, கொள்ளிடத்தில் தண்ணீர் இல்லை. என் கண்ணால் பார்த்தது மாயவரத்தில் இருந்து சென்னை போகின்ற வரை வழியில் இருந்த கொள்ளிடம் எல்லாம் உலர்ந்து இருக்கு.

இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து லிப்ட் முறைப்படி எல்லா நீர்நிலைகளும் நிரப்பப்பட வேண்டும் என்று கோரிக்கை ரொம்ப நாளாகவே மக்களிடம் இருக்கு, அது ஏதாவது கவனிக்கப்பட்டிருக்கா ?  இப்பவும் தர்மபுரி உலர்ந்து இருக்கு, நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சிவகங்கை எல்லாம் ரோட்டில் முழங்கால் அளவிற்கு தண்ணீர், இரவு முழுவதும் மழை ஆனால் இங்கே எல்லா நீர்நிலைகளும் வறண்டு போயிருக்கிறது.

ஆகவே நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த சரியான ஒழுக்க நெறிமுறைகள் இருந்தால் ஒழிய, கொண்டு வந்தால் ஒழிய, மாறி மாறி மக்கள் வெள்ளத்தாலும், வறட்சியாலும் பாதிக்கப்படுவது நிறுத்த முடியாது. அப்போ அது வர வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் இந்த திரவிடியன் ஸ்டாக் அரசியலில் இருந்து நீக்கப்பட வேண்டும். அது நடக்காமல் தமிழ்நாட்டில் மாற்றமே வராது, விடியலே கிடையாது நமக்கு.

ஒரு பாட்டு ஒன்னு மட்டும் மீம்ஸ் அழகாக போட்டு இருக்காங்க, மழை வந்ததனால், வெள்ளத்தில் உள்ள பள்ளம் தெரியாது என்பது விடியலார் வகுத்ததடா, என ஒரு பாட்டு. அது தவிர்ந்த ஸ்டாலின் அரசாங்கம் முழுவதும் தோற்றுவிட்டது. எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை, ஆறு மாதத்தில் டிரைனேஜ் சென்னை சிட்டியில் சரி பண்ணுவதற்கான துப்பு இல்லை என்றால் எதற்கு உங்களிடம் அதிகாரம் இருக்கிறது.

முழுவதுமாக தோற்றுவிட்டது. என்ன பொருத்த வரை நீங்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆகி இல்ல 54வருஷம் ஆச்சு, 1967 லிருந்து, அதனால் தவறுகளைத் திருத்திக்கொண்டு ஆட்சியில் கவனம் செலுத்த வேண்டும், சும்மா கோணியை தூக்கி தோளில் போட்டு கோவில் கோவில் தங்கம் எடுக்க கூடாது. அந்த ஒரு வேலையை தான் ஸ்டாலினும், சேகர் பாபுவும் செய்திருக்கிறார்கள்.

அது சமயபுரம் கோவில் ஆக இருக்கட்டும், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆக இருக்கட்டும், கருமாரியம்மன் கோவில் ஆக இருக்கட்டும் கோணியை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு, அதையும் நீதிமன்றம் நிறுத்தியிருக்கிறது சட்டவிரோதமானது என்று… நான் முதல் நாளே சொன்னேன். ஏனென்றால் இது சட்டவிரோதம், உங்களுக்கு அதிகாரம் இல்லை. ஆகவே அதிகாரமற்ற வெறும் வெற்று அறிவிப்புகளை வைத்து மக்களை ஏமாற்றுகிறது அரசு என விமர்சித்தார்.

Categories

Tech |