Categories
மாநில செய்திகள்

தெற்கு அந்தமான் கடலில் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை…. தமிழகத்தை பாதிக்குமா….??? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…

தெற்கு அந்தமான் கடலில் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் எனவும் ஒரிசா மற்றும் ஆந்திரா கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம்,புதுவையில் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு என கூறியுள்ளது.

மேலும் இன்று கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் ராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரையில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் குமரி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |