செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், 144 17 இலவச உதவி மையம் எண் மாணவர்களுக்கு தெரியனும் என்று சொல்லியுள்ளீர்கள். சென்னை ஐகோர்ட்டு உத்தரவு போட்டுள்ளது. ஸ்டூடண்ட்ஸ் தெரிகிற மாதிரி டிஸ்பிளே பண்ண வேண்டுமென்று, நீங்கள் எந்த ஸ்கூலிலாவது, எங்காவது இதை பார்க்க முடிகிறதா ? எந்த கவர்மெண்ட் ஸ்கூலிலும் கிடையாது, பிரைவேட் ஸ்கூலில் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. எஜுகேஷன் டிபார்ட்மெண்ட் கமிஷனர் சுற்றறிக்கையை யாரும் பின்பற்றவில்லை என்ற கேள்விக்கு,
நவம்பர் மாதம் 22ஆம் தேதி நடந்த சிஇஓ மீட்டிங்கில் முக்கியமான கருத்தாக சொன்னது இதுதான். தமிழகம் முழுவதும் ஏறத்தாழ எல்லா பள்ளிக்கூடம் சேர்ந்து 58,000 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றது. 2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமான வகுப்பறைகள் இருக்கின்றது. எல்லா வகுப்பறையிலும் இதுபோன்ற பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்றுதான் கட்டளையிட்டு இருக்கின்றோம்.
சென்னை மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக தமிழகம் மட்டுமல்ல எல்லா பள்ளிக்கூடத்தில் இருக்கின்ற ஒவ்வொரு கிளாஸ் ரூமிலும் இருக்க வேண்டும் ஒவ்வொரு கிளாஸ் ரூம்மில் இந்த நம்பருக்கான போஸ்டர் ஒட்டவேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். பின்பற்றாதவர்களை கண்டிப்பாக செய்யச் சொல்வோம். இது அவசியமான ஒன்று கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்.
பத்திரிக்கை சந்திப்பின் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால் அந்தந்த பள்ளியில் இது பின்பற்ற வேண்டும். மாநில முதலமைச்சர் இதெற்கென்று வீடியோ வெளியிட்டுள்ளார். பயப்படாதீர்கள் குழந்தைகளே…. நாங்கள் இருக்கின்றோம் உங்களுக்கு என முதலமைச்சர் ஒரு விழிப்புணர்வை சொல்லி இருக்கிறார்கள். மாணவச் செல்வங்களுக்கு தெரிந்தாலும் கூட ஒவ்வொரு பள்ளியிலும் இதனை கண்டிப்பாக ஒட்ட வேண்டும் என தெரிவித்தார்.