தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும், மதுரை, திருநெல்வேலி கடலூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை அறிவித்துள்ளது.
மேலும் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வரும் டிசம்பர் 3 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.