Categories
மாநில செய்திகள்

BREAKING : 3 வேளாண் சட்டங்களும் ரத்து…. இரு அவையிலும் நிறைவேற்றம்…!!!

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த வாரம் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இந்த சட்டம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

முதல் நாளான இன்று காலை மக்களவையிலும், பிற்பகலில் மாநிலங்களிலும் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கிடையே மசோதா குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது .

Categories

Tech |