Categories
மாநில செய்திகள்

“பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை”…. தவறான தகவல்…. அன்பில் மகேஷ் விளக்கம்…!!!

பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான், ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஒற்றை எண்ணிக்கையில் பரவி வருகிறது. தென்ஆப்பிரிக்காவின் மருத்துவ ஆய்வு உறுதி ஆகும் முன்னரே பல நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட  ஐரோப்பிய நாடுகள், வங்கதேசம், சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதனால் உருமாறிய வைரஸ் பரவாமல் இருப்பதற்கு தமிழகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படும் என்று வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  இது தொடர்பாக விளக்கம் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்த‌லால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் தகவல் தவறானது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |