‘ஆலுமா டோலுமா’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் தல அஜித் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”வலிமை”. இயக்குனர் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் 2015 ம் ஆண்டு வெளியான திரைப்படம் ”வேதாளம்”. இந்த படத்தில் லட்சுமிமேனன், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அனிருத் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் ”ஆலுமா டோலுமா” பாடல் தற்போது யூடியூபில் சாதனை படைத்துள்ளது. அதன்படி, தற்போது இந்த பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.