Categories
மாநில செய்திகள்

JUSTIN : அம்மா மினி கிளினிக் தற்போது செயல்பாட்டில் இல்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் தற்போது செயல்பாட்டில் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் பொழுது உருவாக்கப்பட்டது அம்மா மினி கிளினிக். இது ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைத்த பிறகும்கூட அம்மா கிளினிக் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. தற்போது வீடு தேடி மருத்துவம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் தற்போது அம்மா மினி கிளினிக் செயல்பாட்டில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதற்கு அதிமுகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |