Categories
தேசிய செய்திகள்

பாஜக ஆட்சியில் செல்ஃபோன் கட்டணம் மிகவும் குறைவு’ – ரவிசங்கர் பிரசாத்

பாரதிய ஜனதா ஆட்சியில் செல்போன் சேவை கட்டணம் குறைவாக இருப்பதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருக்கிறார். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் ஒரு ஜிபி இணைய சேவை பெற 269 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் செலவிட நேர்ந்ததாகவும் தற்போதைய ஆட்சியில் ஒரு ஜிபி 11 ரூபாய் 78 காசுகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார் முன்னணி செல்போன் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் சேவை கட்டணத்தை உயர்த்தி இருக்கும் நிலையில் அமைச்சரின் விளக்கம் வெளியாகியிருக்கிறது.

Categories

Tech |