Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது..

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கடந்த சில நாட்களாக விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று 26மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்ட நிலையில் நாளையும் விடுமுறை அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலவரம் படி, தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மாணவர்களின் நலனைக் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |