Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளை(30) மின் விநியோகம் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி நாளை சென்னையில் உள்ள பொன்னேரி பகுதி, பூந்தமல்லி வடக்குப் பகுதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்றும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மாலை 4 மணிக்குள் மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்றும் மின் வாரியம் அறிவித்துள்ளது.

அதே போல் பூந்தமல்லி வடக்குப் பகுதியில் உள்ள காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி மெயின் ரோடு, அருணாசலம் நகர், மேட்டுப்பாளையம், ஆயில்சேரி ஆகிய பகுதிகளிலும், பொன்னேரி பகுதியை சுற்றியுள்ள திருவாய்கண்டிகை, கரடிபுத்தூர், ஜி.ஆர் கண்டிகை, கண்ணக்கோட்டை, சின்னபுலியூர், பெரியபுலியூர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Categories

Tech |