ஏர்டெல், வோடஃபோன் போன்ற செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களுடைய பிரிபெய்டு (prepaid) வாடிக்கையாளர்களின் சேவை கட்டணத்தை 40 சதவீதம் அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் ஏர்டெல்,வோடபோன் நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக அறிவித்திருந்தனர் . அந்த நிலையில் தற்போது வாடிக்கையாளர்களின் கட்டணத்தை 40சதவீதத்திற்கு உயர்த்தி உள்ளனர் .
ஏர்டெல் :
இதனால் 14 முதல் 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்துள்ளது.தற்போது நடைமுறையில் இருந்த கட்டணங்களைவிட புதிய கட்டணங்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 0.50 முதல் 2.85 வரை உயர்த்தியுள்ளது. ஏர்டெலில் இதற்கு முன்பு 28 நாளுக்கு ரூபாய் 129 என்று இருந்த கட்டணம் இனிமேல் ரூபாய் 148-யாக இருக்கும்.
அதுபோலவே 84 நாட்களுக்கு ரூ. 448 என்று இருந்த கட்டணம் இனிமேல் ரூபாய் 598-யாக இருக்கும். 365 நாட்களுக்கு இதுவரை இருந்து வந்த ரூபாய் 1,699 என்ற கட்டணம் இனிமேல் 2, 398-யாக இருக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
வோடபோன் :
22 முதல் 67 சதவீதம் வரை கட்டண உயர்வை அறிவித்துள்ளது வோடபோன் நிறுவனம் . இதற்கு முன்பு 28 நாட்கள் பயன்படுத்துவதற்கு ரூ.179 என்று இருந்த கட்டணம் இனிமேல் ரூ.299 ஆக இருக்கும்.அதுபோலவே 84 நாட்கள் பயன்படுத்த ரூ. 569 என்று இருந்த கட்டணம் இனிமேல் ரூபாய் 699-ஆக இருக்கும். 365 நாட்களுக்கு இதுவரை இருந்து வந்த ரூபாய் 1,699 என்ற கட்டணம் இனிமேல் ரூபாய் 2, 399ஆக இருக்கும்என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.