பெண்ணிடமிருந்து தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஜீவா நகரில் பாலசுப்பிரமணியம்- தனபாக்கியம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனபாக்கியம் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக 2 வாலிபர்கள் தன பாக்கியத்தின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து தனபாக்கியம் மானாமதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதேபகுதியில் வசிக்கும் விஜய் மற்றும் சுல்தான் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.