தென்னாபிரிக்காவின் சுகாதார மந்திரி, உலக நாடுகள், தங்கள் நாட்டின் மீது பயணத்தடை விதித்ததற்கு அதிருப்தி தெரிவித்திருக்கிறது.
தென்னாப்பிரிக்க நாட்டில், முதல் முறையாக ஓமிக்ரோன் வைரஸ் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல நாடுகள் அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க அரசு, தங்கள் நாட்டின் மீது மற்ற நாடுகள், பயணத்தடை விதித்திருப்பதற்கு அதிருப்தி தெரிவித்திருக்கிறது.
இது குறித்து தென்னாப்பிரிக்காவின் சுகாதார மந்திரி தெரிவித்துள்ளதாவது, தங்கள் நாட்டின் மீது, விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு போன்ற எந்த நடவடிக்கைகளையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதனால், பொருளாதாரம் பாதிக்கப்படும். எங்கள் நாட்டின் மீது விதிமுறைகளை நடைமுறைப்படுத்திய நாடுகள், அறிவியலை கடைபிடித்து அவர்களது முடிவுகளை மீண்டும் ஆராய்வார்கள் என்று நம்புகிறோம். மேலும் இதற்கு முன்பே உலகின் பல பகுதிகளில் இந்த வைரஸ் பரவி விட்டது என்று கூறியிருக்கிறார்.