Categories
மாநில செய்திகள்

JUSTIN : கொளத்தூர் பகுதியில்…. மருத்துவ முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு…!!!

சென்னை கொளத்தூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ முகாமில் முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல முக்கிய இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்வரின் தொகுதியாக பார்க்கப்படும் கொளத்தூர் தொகுதியில் கடந்த முறை பெய்த மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து அப்பகுதியில் தேங்கியிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கிய மழையால் மறுபடியும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது கொளத்தூர் தொகுதி. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ முகாமில் முதல்வர் முக ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்து அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

 

Categories

Tech |