Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேதாரண்யத்தில் கடல் சீற்றம் … மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..!

வேதாரண்யத்தில் பலத்த மழை மற்றும் கடல் சீற்றத்தின் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை                                                                                                                                                    

நாகப்பட்டினம்  மாவட்டம் ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம்,புஷ்பவனம் ஆகிய 10-திற்கும்  மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார்  ஆயிரத்திற்கும் மேல்  பைபர் படகுகள் உள்ளன .இதில் 5,000 திற்கும்  மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கும்  தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் . எனவே இப்பகுதியில் சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை  பெய்து வருவதால்  கடலில் சூறைக்காற்று வீசுகிறது .

வேதாரண்யத்தில் கடல் சீற்றம் க்கான பட முடிவு

இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள்   மீன்பிடிக்க செல்லவில்லை. இதைத் தொடர்ந்து, கடல் சீற்றத்தின் காரணமாக பைபர் படகுகளை கரையோரத்தத்தில் பாதுகாப்பாக நிறுத்தி -வைத்துள்ளனர். மேலும் மீனவர்கள்  கடலுக்கு செல்லாததால் தங்களுடைய  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவ்வூர்  மீனவர்கள் தெரிவித்துள்ளனர் .

Categories

Tech |