Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

செல்போன் திருடிய லாரி டிரைவர்…. அடித்து உதைத்த 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

செல்போன் திருடிய சம்பவம் குறித்து லாரி டிரைவரை கடத்தி தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காரணம்பேட்டை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் சிவகுமார் சொந்தமாக லாரி வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக சிவக்குமாரிடம் லாரி ஓட்டுநராக ராஜேந்திரன் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் லாரி டிரைவரான ராஜேந்திரன் லாரி அதிபர் சிவகுமாரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடி விட்டு தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து சிவகுமாரின் மகனான அருண் குமார் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் உள்பட 3 பேர் லாரி டிரைவர் ராஜேந்திரனின் வீட்டிற்கு சென்றனர்.

அங்கிருந்து ராஜேந்திரனை கடத்திச் சென்று அங்குள்ள அறையில் கட்டி வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து லாரி டிரைவர் ராஜேந்திரன் தப்பி சென்று பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த ராஜேந்திரனுக்கு அரசு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினரிடம் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் மூலம் காவல்துறையினர் சிவகுமாரின் மகன் அருண்குமார், அவரது நண்பர்கள் குணசேகரன், சந்துரு ஆகிய 3 பேரை கைது செய்து திருப்பூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |