Categories
தேசிய செய்திகள்

மறு உத்தரவு வரும் வரை கட்டுமான பணிகளுக்கான தடை தொடரும்…. டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு….!!

இந்திய தலைநகரமான டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதற்கு டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பயிர்களை எரிப்பது மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகையை காரணமாக கூறப்படுகிறது. எனவே காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதில் நவம்பர் 21 ஆம் தேதி வரை கட்டுமானம் பணிகளுக்கு தடை விதித்தது. அரசு துறைகளில் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100% வேலை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் வாகனங்களில் ஏற்படும் புகையின் அளவை குறைப்பதற்காக டெல்லி நகருக்குள் 26-ம் தேதிவரை லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் காற்றின் தரம் எதிர்பார்த்த அளவிற்கு குறையவில்லை. எனவே டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் கட்டுமான பணிகளுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் தடை விதித்தது.

இந்நிலையில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருந்து கொண்டு வருவதால் கட்டுமானப் பணிகளுக்கான தடையை மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து நீடிக்கும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று அறிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்தப்படும் லாரிகள் தவிர்த்து பிற லாரிகள் நகருக்குள் வருவதற்கான தடை வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதி வரை நீடிக்கப்படும். ஆனால் எரிவாயுவால் இயக்கப்படும் லாரிகள் மற்றும் மின்சார லாரிகள் நகருக்குள் அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். மேலும் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.5,000 நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |