Categories
உலக செய்திகள்

“தினந்தோறும் 3 டம்ளர் சிறுநீர் குடிக்கும் பெண்!”… என்ன காரணம்…? வெளியான வீடியோ…!!

அமெரிக்காவில் ஒரு பெண், தினசரி 3 டம்ளர் சிறுநீர் குடித்து வருவதாக கூறி ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

அமெரிக்காவில் இருக்கும் கொலரடோ பகுதியைச் சேர்ந்த 53 வயது பெண், தினந்தோறும் தன் சிறுநீரை பருகி வரும் வித்தியாசமான பழக்கத்தை கொண்டிருக்கிறார். இது தொடர்பான ஒரு வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். மேலும் இது தொடர்பில் அவர் நேர்காணல் அளித்திருக்கிறார்.

அதில், தனக்கு இளம் வயதில் உடல்நிலை சரியில்லாமல் போனபோது, சிறுநீர் குடிக்க தொடங்கியதாக கூறியிருக்கிறார். அப்போது அதன் சுவை பிடித்ததால் தினந்தோறும் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார். மேலும், தன் சிறுநீரில் ஒவ்வொரு நாளும் புதிதான சுவை இருப்பதாக கூறியிருக்கிறார்.

இது மட்டுமின்றி, தன் கண்களுக்கு கீழ் கருவளையம் இருப்பதை நீக்குவதற்காக சிறுநீர் குடிப்பதாகவும், இதனால் தன் முடியும் பற்களும் வலிமை பெறுகின்றன என்றும் கூறியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் மூன்று அல்லது நான்கு டம்ளர் சிறுநீர் பருகி வருவதாக தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |