பொது விநியோகத் திட்டத்தில் 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை நியாய விலைக்கடை அட்டைகள் உள்ளன. இதனை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர், அட்டையை அரிசி பெறக்கூடிய அட்டைகளாக மாற்றம் செய்து தர கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, குடும்ப அட்டைகளைத் தகுதியின் அடிப்படையில், அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. அதன்படி 4 லட்சத்து 50 ஆயிரம் சர்க்கரை குடும்ப அட்டைகள், அரிசி அட்டைகளாக மாற்றம் செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு வழங்குவதற்காக மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரத்து 389 மெட்ரிக் டன் அரிசியைக் கூடுதலாக பெற்று வழங்கவும், அதற்காக மாதம் ஒன்றுக்கு சுமார் 50 கோடி ரூபாய் வீதம், ஆண்டுக்கு 604 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளதாக, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.