Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த கணவன்…. அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி…. மதுரையில் பரபரப்பு…!!

மது குடித்துவிட்டு தகராறு செய்ததால் கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஷீலா என்ற மனைவி உள்ளார்.இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வழக்கம்போல மணிகண்டன் மது குடித்துவிட்டு தகராறு செய்துள்ளார்.

அப்போது கோபமடைந்த ஷீலா அம்மிக்கல்லை எடுத்து மணிகண்டன் தலை மீது போட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஷீலாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |