Categories
உலக செய்திகள்

“பெண் மருத்துவர் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலன்!”… பயங்கர சம்பவத்தின் பின்னணி…!!

பிரிட்டனில் பெண் மருத்துவர், மீது அவரின் முன்னாள் காதலன் ஆசிட் வீசிய சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த பெண் மருத்துவரான Dr Rym Alaoui-ன் வீட்டில் இரவு நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. அவர் கதவைத் திறந்த அடுத்த நொடி, ஒரு பெண் அவரின் முகத்தில் ஆசிட் வீசி விட்டு தப்பி ஓடினார். அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அண்டை வீட்டார் ஓடிவந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Dr Rym Alaoui மீது ஆசிட் வீசிய பெண்ணை காவல்துறையினர் தேடி வந்தபோது, கண்காணிப்பு கேமராக்களில், அந்த பெண் கடைசியாக ஆண் உருவத்திற்கு மாறினார். அதன்பின்பு தான் மருத்துவர் மீது ஆசிட் வீசியது, ஆண் என்பது தெரியவந்தது. அதாவது ஒரு நபர் பெண் போன்று வேடமிட்டு மருத்துவரின் முகத்தில் ஆசிட் வீசியிருக்கிறார்.

அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளும் போது, Dr Rym Alaoui-உடன், பயிற்சி பெற்ற  மருத்துவ மாணவர் Milad Rouf என்பது தெரிய வந்திருக்கிறது. அதன்பின்பு, காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதாவது இருவரும் ஒன்றாக Cardiff என்ற பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்வி பயின்றுள்ளனர்.

அப்போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. கொரோனா தொற்று பரவிய சமயத்தில்  இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. அதன்பின்பு, Dr Rym Alaoui, அந்த நபருடன் பேசவில்லை.  எனவே, அவரை பழி வாங்கும் நோக்கில் அவர் மீது ஆசிட் வீசி சென்றுள்ளார். தற்போது, Dr Rym Alaouiயின் முகம், கண்கள், கழுத்து, மார்பு பகுதி மற்றும் கைகளில் ஆசிட்டால் ஏற்பட்ட காயம் இருக்கிறது.

மேலும் அவர், தன் வலது கண் பார்வையை இழந்துவிட்டார். இரவு சமயங்களில் தூங்கும்போது கண் இமைகளைக்கூட மூட முடியாமல் சிரமப்படுகிறார். எனவே, அவரின் சிகிச்சைக்காக, குடும்பத்தினர் நிதி திரட்டி வருகிறார்கள்.

Categories

Tech |