மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று சிவபெருமான் வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாளாக இருக்கும். பொருளாதார நிலை உயரும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக முடியும். நேற்றைய பணி மீண்டும் இன்று தொடரும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். தேவையற்ற இடமாற்றம் ஏற்பட கூடும்.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுதும் பரிகாசம் செய்யும் பொழுதும் கொஞ்சம் கவனமாக இருங்கள். அது மட்டுமில்லாமல் வாகனத்தில் செல்லும்போதும் கவனமாக இருங்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். திருமண முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள் பார்த்துக்கொள்ளலாம்.
இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்