Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… ‘புதிய பாதை புலப்படும்”.. வாகனத்தில் செல்லும் போது கவனம்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். அயல் நாட்டில் இருந்து அணுகூல செய்திகள் வந்து சேரும். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள்  செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். இன்று தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனமாக ஓட்டிச் செல்லுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும்.

புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். இன்று மாணவச் செல்வங்களுக்கு நல்ல முன்னேற்றகரமான நாளாக இருக்கும். இன்று பொருளாதார ரீதியில் ஓரளவு சிறப்பு இருக்கும். உங்களுடைய நிதி மேலாண்மையும் இன்று ஓங்கி நிற்கும். ஆனால் மிக முக்கியமாக வாகனத்தில் செல்லும் போது ரொம்ப கவனமாக செல்ல வேண்டும்.

அதுதான் நாங்கள் மீண்டும் ஒருமுறை சொல்கின்றோம். பொறுமை என்பது இன்று கொஞ்சம் அவசியமாக தேவைப்படுகிறது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டுசெல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |